முக்கியச் செய்திகள் தமிழகம்

அனைத்தையும் தீர்மானிக்கும் அதிகாரம் பொதுக் குழுவிற்கு தான் உள்ளது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் உள்ளிட்ட அனைத்தையும் தீர்மானிக்கும் அதிகாரம் பொதுக் குழுவிற்கு தான் உள்ளது என்று தமிழக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ள, முன்னாள் அமைச்சர்
ஜெயக்குமார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கையெழுத்து போட்ட பிறகு
செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்து கூறியதாவது:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்பது காலத்தின் கட்டாயம், ஒற்றைத் தலைமை அவசியம் என்பது தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் மூலம் பிரதிபலிக்கச் செய்துள்ளது. தலைமைக் கழகத்தில் பேசப்பட்ட கருத்துகள் அடிப்படையில், இவர்தான் ஒற்றைத் தலைமைக்குத் தகுதி என நான் சொல்லவே இல்லையே.

பொதுக்குழு மட்டுமே எதையும் முடிவு செய்யும். நான் பொதுவானவன். எனக்கு கட்சி தான் முக்கியம். நான் கட்சிப்பக்கம் தான் இருக்கிறேன். நான் பார்க்காத பதவியே இல்லை. மாவட்டச் செயலாளர் முதல் மாணவர் அணி செயலாளர் என அனைத்தையும் பார்த்துள்ளேன். ஆட்சியில் இருந்த போது மீன்வளத் துறை, பால் வளத் துறை என அனைத்தையும் பார்த்துள்ளேன். நான் ஒன்று கேட்கிறேன், பதவி ஆசையில், அம்மா மறைவுக்கு பிறகு, நிதித் துறை என்னிடம் இருந்தபோது யாருமே என்னிடம் எதையும் கேட்கவில்லை.

அப்போது ஒரு பத்திரிகையாளர் ஓ.பி.எஸ். உங்களோடு இணைந்தால் நிதித் துறை பதவியை விட்டு தருவீர்களா என கேட்ட பொது, தாராளமாக விட்டுத் தரேன் என நான் சொன்னேன். இப்போது வரை எனக்கு பதவி ஆசை இல்லை.

மேலும் நாங்கள் வாழ்நாள் முழுவதும், திமுகவை எதிர்ப்பதை ஒரே கொள்கையாகக் கொண்டுள்ளோம். ஒரு கருத்து பேசப்பட்டு, அந்த கருத்துக்கு செயல் வடிவம் கொடுப்பது முதல், எல்லாமே உடன்பாடு அளிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

எனக்கென ஒற்றைத் தலைமை குறித்து தனிப்பட்ட கருத்து கிடையாது. தலைமை கழகம் என்பது ஒரு இடம், அதில் எம்.பி., எம்எல்ஏ இருக்கிற இடத்தில் மாவட்டச் செயலாளர்கள் அவர்கள் கருத்துக்களைச் சொல்வது தவறில்லை. பொதுக்குழு கூட்டத்தில்தான் விதியை கொண்டு வரலாம் விதியை திருத்தலாம். அனைத்திற்கும் அதிகாரம் உண்டு என்றார் ஜெயக்குமார்.

அதிமுக வியாபார நோக்கத்தில் இருக்கிறது என்ற டி.டி.வி தினகரன் கருத்திற்கு உங்கள் பதில் என்ன என்ற கேள்விக்கு, “அவர் ஒரு அரசியல் வியாபாரி, அவருடைய மனசில் இருப்பது தான் அவர் கூறுவார்” என்றார் ஜெயக்குமார்.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

30 ஆண்டுகள் வரை இளமையை நீட்டித்து ஆராய்ச்சியில் சாதனை

Janani

அதிமுகவின் பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிச்சாமி!!

Jayasheeba

கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து- 12 பேர் பலி!

Halley Karthik