பொதுக்குழு ஒத்தி வைப்பா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

பொதுக்குழு ஒத்திவைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை ,கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும் 23ம் தேதி நடைபெற உள்ள…

பொதுக்குழு ஒத்திவைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை ,கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும் 23ம் தேதி நடைபெற உள்ள செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்திற்கு,  தீர்மானம் தயாரிக்கும் குழுவின்  இரண்டாம் கட்ட ஆலோசனை நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பொன்னையன், ஆர்.பி உதயகுமார், சி.வி.சண்முகம், வளர்மதி, வைகை செல்வன், செம்மலை, நத்தம் விசுவநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆலோசனைக் கூட்டம் நிறைவு பெற்ற பின்னர் செய்தியாளர்களை சந்திந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓபிஎஸ் தலைமை அலுவலகம் வருகிறார் என்பதால் இந்த கூட்டம் முடிந்து செல்கிறோம் என்ற கருத்து தவறானது. வரும் 18 தேதி மீண்டும் தீர்மானம் தயாரிக்கும் குழு ஆலோசனைக் கூட்டம் மீண்டும் நடக்க உள்ளது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் போது பேசப்பட்ட ஒற்றைத் தலைமையை பற்றி அனைவரும் கருத்து தெரிவிக்கிறார்கள். அது செயல் வடிவம் பெறலாம், பெறாமலும் போகலாம் என்றார்.

மேலும் பொதுக்குழு ஒத்திவைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை, கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் உறுதி அளித்தார். அனைத்தும் பிரச்சினையும் சுமுகமாக முடியும் என நம்புகிறோம் என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.