இன்று (2022 ஜூன் 20-ஆம் தேதி) முதல் முகக்கவசம் அணிந்து வருபவர்கள் மட்டுமே
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தோற்று தற்போது அதிகரித்து வருவதால் உயர்நீதிமன்ற
மதுரைக்கிளையில் இன்று முதல் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், மேலும் வழக்குக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் நீதிமன்றம் வருவதை தவிர்க்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது . மேலும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பதிவாளர் தரப்பில் சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன்படி இன்று நீதிமன்றத்தில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள்,
காவல்துறையினர், வழக்கறிஞர்கள் என அனைவரும் முகக் கவசம் அணிந்து நீதிமன்றத்திற்கு வந்தனர். நீதிமன்றத்திற்குள் வரும் அனைவரும் முகக் கவசம் அணிந்து வருகிறார்களா? என்பதை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் சோதனை செய்து நீதிமன்றத்திற்குள் அனுமதித்தனர்.
மேலும் நீதிமன்றத்திற்கு வரும் பார்வையாளர்கள், காவல்துறையினர் தனிவழி
அமைக்கப்பட்டு நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
வெளிநபர்கள், பார்வையாளர்கள், பொதுமக்கள், காவல்துறையினர் ஆகியோர்
நீதிமன்றத்திற்கு வரும் பொழுது அவர்கள் முழுமையான சோதனைக்கு பின்பே
அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
-மணிகண்டன்