சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ஊராட்சி மன்ற பெண் தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளரை சாதியின் பெயரை குறிப்பிட்டுப் பேசித் தாக்கியதாக அதிமுக பிரமுகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் டி.கோணகாபாடி ஊராட்சி அமைந்துள்ளது. இதன் தலைவராக அம்சவள்ளியும் ஊராட்சி செயலாளராக அவரது கணவர் சதீஷ்குமாரும் செயல்படுகின்றனர். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் மோகன், இருவரையும் பணி செய்யவிடாமல் தடுத்ததோடு சாதியின் பெயரைக் குறிப்பிட்டு கடுமையாகக் திட்டியதாகக் கூறபடுகிறது.
ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நுழைந்து தாக்குதல் நடத்திய மோகன் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓமலூர் டி.எஸ்.பி.யிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement: