அதிமுக பொன்விழா ஆண்டை கொண்டாட உள்ளதை தொடர்ந்து தொண்டர்களுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி வெற்று ஆட்சி அமைத்துள்ளது. ஆதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக உள்ளது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார். இந்நிலையில், வரும் 17ம் தேதி அதிமுக 50வது பென்விழா ஆண்டை கொண்டாட உள்ளது. இதை தொண்டர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் கொண்டாட வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் நடைபெற்று வந்த தீய சக்தியின் ஆட்சியை அகற்றி, தர்மத்தையும், நீதியையும் நிலைநாட்ட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் ‘எம்.ஜி.ஆரால் தமிழக மக்களுக்காக உருவாக்கப்பட்ட மாபெரும் மக்கள் பேரியக்கமாம் “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’” 49 ஆண்டுகளைக் கடந்து, 17.10.2021 – ஞாயிற்றுக் கிழமை அன்று “பொன் விழா” காண இருக்கும் இத்திருநாளை, கழகத்தின் ஒவ்வொரு தொண்டரும் மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டிய நேரமிது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க கழகத்தின் “பொன் விழா” ஆண்டைக் கொண்டாடும் விதமாக, கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டக் கழகங்களின் சார்பில் ஆங்காங்கே அமைந்திருக்கும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைகளுக்கும், அவர்களது படங்களுக்கும் மாலை அணிவித்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.