முக்கியச் செய்திகள் விளையாட்டு

RCBvsSRH: ஆறுதல் வெற்றி பெறுமா ஹைதராபாத்?

இன்றைய போட்டியில் பெங்களூரு அணி ஆதிக்கம் செலுத்தி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறுமா என அந்த அணி ரசிகர்கள் ஆவலுடன் இன்றைய ஆட்டத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். ஏற்கெனவே சென்னை, டெல்லி, பெங்களூரு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. 4வது இடத்துக்கான போட்டியில் மும்பை, கொல்கத்தா அணிகள் உள்ளன. இந்நிலையில், புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ள பெங்களூரு அணி, கடைசி இடத்தில் இருக்கும் ஹைதராபாத் அணியுடன் இன்று பலப்பரிட்சையில் ஈடுபடுகிறது.

இன்றைய போட்டியில் பெங்களூரு அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்று பெறும் பட்சத்தில் 2வது இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் ஹைதராபாத் அணி இதுவரை 12 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டும் இதுவரை வெற்றி பெற்றுள்ளதால், இந்த போட்டியில் வெற்றி பெற்றாலும் அது அந்த அணிக்கு ஆறுதல் வெற்றியாக மட்டுமே அமையும். அதனால், புள்ளிப்பட்டியலில் முன்னேற பெங்களூரு அணியும், ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில் ஹைதராபாத் அணியும் இன்று களம் காண்பார்கள் இரு அணிகளும் இதுவரை 19 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், ஹைதராபாத் அணி 10 போட்டிகளிலும் பெங்களூரு அணி 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டிக்கு முடிவு எட்டப்படவில்லை

Advertisement:
SHARE

Related posts

மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் பொய் பேசிவிட முடியுமா?- அமைச்சர் ஓ.எஸ்.மணியன்!

Jayapriya

சைதாப்பேட்டை தொகுதி முழுவதும் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் சீரமைக்கப்படும்: சைதை துரைசாமி!

Halley karthi

சூரப்பா மீதான விசாரணை நிறைவு

Saravana Kumar