திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் இலவச தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம். நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதிலிருந்தே கோயிலில் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டது. பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்தது. தொற்று பரவல் குறைந் ததன் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இருப்பினும் உள்ளூர் பக்தர்களை தவிர மற்ற மாநில பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளதால் ஏழுமலை யானை தரிசிக்க தமிழக பக்தர்கள் விரும்புவார்கள் என்பதால், இரவு 9.30 மணி வரை பக்தரகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று முதல் இரவு 11.30 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு 12 மணிக்கு ஏகாந்த சேவை நடத்தப்பட்டு கோயில் கதவுகள் அடைக்கப்பட உள்ளது.
இலவச தரிசனத்தில் தற்போது தினம் தோறும் வழங்கப்பட்டு வரும் 2 ஆயிரம் டிக்கெட்டு களை 8 ஆயிரம் டிக்கெட்டுகளாக தேவஸ்தானம் உயர்த்தியுள்ளது. பக்தர்கள் ஆதார் அட்டையை காண்பித்து சாமி தரிசனம் செய்து கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.







