ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் விலகுவதாக விராத் கோலி அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி. உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக விளங்கும் அவருக்கு வயது 33. டி-20, ஒரு நாள், டெஸ்ட் ஆகிய மூன்று போட்டிகளுக்கும் அவரே கேப்டனாக இருந்து வருகிறார். இந்நிலையில் பணிச்சுமையை குறைக்கும் பொருட்டு, டி-20 உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு, டி-20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகப்போவதாக அவர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது பெங்களூரு அணி கேப்டன் பதவியிலிருந்தும் அவர் விலக இருக்கிறார். கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினாலும் தொடர்ந்து அந்த அணிக்காக ஆடுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் டி 20 அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.








