கொல்கத்தா- சென்னை தினசரி விரைவு ரயிலான கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 132பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் மேற்கு வங்காளம், ஒரிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களின் இணைக்கும் விதமாக இதன் வழித்தடம் அமைந்துள்ளது.
இந்த நிலையில் கோரமண்டல் ரயில் வண்டி எண் 12841 இன்று மாலை 3:30 வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் ஹவ்ராவிலிருந்து புறப்பட்டது. இந்த ரயில் நாளை மாலை 4:50க்கு சென்னை வந்து சேரும்.
இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தை கடந்து ஒரிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது ரயில் நேருக்கு நேர் மோதியதில் இரயிலின் பெட்டிகள் தடம் புரண்டது.
இந்த விபத்தில் 132 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக ஒரிசா மாநில அரசின் முதன்மை செயலாளர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். 50 க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.







