சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இந்தியா முழுவதும் கொரோனா 2வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி  வருகிறது. முன்னதாக நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில், 2020-2021ஆம் ஆண்டில் 10-ம் வகுப்பு…

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.

இந்தியா முழுவதும் கொரோனா 2வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி  வருகிறது. முன்னதாக நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில், 2020-2021ஆம் ஆண்டில் 10-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மே 4ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.

 

இதையடுத்து மாணவர்களுக்கு 10-ஆம் வகுப்பு அக மதிப்பீடு மதிப்பெண்கள் அடிப்படையிலும், பள்ளியளவில் நடத்தப்பட்ட தேர்வுகள் அடிப்படையிலும் இறுதித் தேர்வு மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு, தற்போது அந்த விவரங்கள் cbseresults.nic.in , cbse.gov.in இணையதளங்களிலும், பள்ளிகள் வாயிலாகவும் மாணவர்கள் தங்கள் மதிப்பெண் விவரங்களை அறிந்துகொள்ளலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

ஏற்கனவே 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அவர்களுக்கான மதிப்பெண் விவரங்கள் அண்மையில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.