தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு!

தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.  தமிழ்நாடு அரசின் கீழ் பணியாற்றி வரும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்படும் நிலையில் இன்று மூன்று ஐபிஎஸ்…

தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசின் கீழ் பணியாற்றி வரும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்படும் நிலையில் இன்று மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

  • மாநில உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டிஐஜியான மகேஷிற்கு கூடுதல் பொறுப்பாக தீவிரவாத தடுப்பு பிரிவு டிஐஜி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
  • காவல்துறை சிறப்பு பிரிவு எஸ்பி அருளரசுவிற்கு கூடுதல் பொறுப்பாக தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்பி பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
  • தீவிரவாத தடுப்பு பிரிவு கோவை எஸ்பியான சசிமோகனுக்கு மதுரை தீவிரவாத தடுப்பு பிரிவின் எஸ்பியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.