5ஜி ஏலத்தில் மோதும் அம்பானி-அதானி குழுமம்

5ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்களுடன் இணைந்து அதானியின் குழுமமும் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்தியாவில் தற்போது 5ஜி அலைக்கற்றை தொழில்நுட்பம் தற்போது செயல்பாட்டுக்கு வர தொடங்கியுள்ளது.…

5ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்களுடன் இணைந்து அதானியின் குழுமமும் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்தியாவில் தற்போது 5ஜி அலைக்கற்றை தொழில்நுட்பம் தற்போது செயல்பாட்டுக்கு வர தொடங்கியுள்ளது. இதற்கான ஏலத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்க போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில் அதானி குழுமும் இந்த ஏலத்தில் பங்கேற்க போவதாக அறிவித்துள்ளது. இதனால் முதல் முறையாக முகேஷ் அம்பானியும், அதானியும் நேருக்கு நேர் மோதவிருக்கின்றனர்.

குஜராத்தை சேர்ந்த பெரும் தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி. இவர்கள் இந்தியாவின் நம்பர் 1 மற்றும் நம்பர் 2 பணக்காரர்களாக இருந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் தங்களின் தொழில்துறையை பன்முகப்படுத்தி வருகின்றனர்.

குஜராத்தைச் சேர்ந்த அம்பானியும் அதானியும் மெகா வணிகக் குழுக்களைக் கட்டியெழுப்பினர், சமீப காலம் வரை நேருக்கு நேர் மோதவில்லை. முந்தையது எண்ணெய் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் வணிகத்திலிருந்து தொலைத்தொடர்பு மற்றும் சில்லறை வணிகத்திற்கு விரிவடைந்தது, பிந்தையது துறைமுகங்கள் பிரிவில் இருந்து நிலக்கரி, எரிசக்தி விநியோகம் மற்றும் விமானப் போக்குவரத்துக்கு பன்முகப்படுத்தப்பட்டது.

அம்பானி மற்றும் அதானி தொழில் குழுமங்கள் சமீபகாலங்களில் நேருக்கு நேர் போட்டியிட்டதில்லை. ஆனால் இப்போது சோலார் பேனல்கள், பேட்டரிகள், பச்சை ஹைட்ரஜன் போன்ற புதிய ஆற்றல் வணிகத்திற்கான பல திட்டங்களை அம்பானி அறிவித்தார். அதேபோல் அதானியும், 2030ம் ஆண்டுக்குள் உலகின் மிகப்பெரிய புதுக்பிக்கதக்க எரிச்சக்தியாக இருக்கும் ஹைட்ரஜன் ஆற்றலுக்கான புதிய திட்டத்தை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.