உங்களின் நம்பிக்கைகளை வலுப்படுத்துங்கள் ; டாப்சி ட்வீட்

டெல்லியில் வேளாண் சட்டத்துக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நடிகை டாப்சி கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்துக்கு எதிராக டெல்லி எல்லையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக, விவசாயிகள்…

டெல்லியில் வேளாண் சட்டத்துக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நடிகை டாப்சி கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்துக்கு எதிராக டெல்லி எல்லையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பலர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் கங்கனா ரனாவத் விவசாயிகள் போராட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். அதே நேரத்தில், சர்வதேச பாப் ஸ்டார் ரிஹானா, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் உறவினர் மீனா ஹாரீஸ், ஆகிய வெளிநாட்டு பிரபலங்கள் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனால் இந்த விவகாரத்தில் உண்மையை முழுமையாக அறிந்து கருத்துத் தெரிவிக்கும்படி, மத்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், பிரபல நடிகை டாப்சி வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், “ஒரு டிவீட் உங்களின் ஒற்றுமையை குலைக்கிறது என்றால், ஒரு ஜோக் உங்கள் நம்பிக்கையை குலைக்கிறது என்றால், ஒரு நிகழ்ச்சி உங்கள் மதத்தை புண்படுத்துகிறது என்றால் நீங்கள்தான் உங்களின் நம்பிக்கைகளை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply