இந்தியாவில் ஒரே நாளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு..!

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகள் முழுவதும் கொரோனாவுக்கு எதிரான போரில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கொரோனாவால் அதிக பாதிப்புகளை சந்தித்த நாடுகள் பட்டியலில்…

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலக நாடுகள் முழுவதும் கொரோனாவுக்கு எதிரான போரில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கொரோனாவால் அதிக பாதிப்புகளை சந்தித்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது. தற்போது நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும்பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், மத்திய சுகாதாரத்துறை நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 12 ஆயிரத்து 899 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 7 லட்சத்து 90 ஆயிரத்து 183 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சைப்பலனின்றி நேற்று ஒரே நாளில் 107 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 703 உயிரிழந்துள்ளது.

கொரோனா தொற்றுக்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த, 17 ஆயிரத்து 824 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் ஒரு கோடியே நான்கு லட்சத்து 80 ஆயிரத்து 455 பேர் குணம் அடைந்துள்ளதாகவும், அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது. தொடர்ந்து ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 25 பேர் மட்டும், சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும், இதுவரை 44 லட்சத்து 49 ஆயிரத்து 552 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், சுகாதாரத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply