ஆபாச மெசேஜ்: நடிகை சனம் ஷெட்டி பரபரப்பு புகார்

வாட்ஸ்-ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாசக் குறுச்செய்திகள் மற்றும் ஆபாசப்படங்களை அனுப்புவதாக நடிகை சனம் ஷெட்டி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். தமிழ் மற்றும் மலையாளத்தில் நடித்து வருபவர் சனம் ஷெட்டி. அம்புலி,…

வாட்ஸ்-ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாசக் குறுச்செய்திகள் மற்றும் ஆபாசப்படங்களை அனுப்புவதாக நடிகை சனம் ஷெட்டி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

தமிழ் மற்றும் மலையாளத்தில் நடித்து வருபவர் சனம் ஷெட்டி. அம்புலி, மாயை, விலாசம், சதுரம் 2 உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகை சனம் ஷெட்டி, பிக்-பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் அதிக பிரபலமடைந்தார்.

சமூக வலைதளத்தில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் நடிகை சனம், தனது வாட்ஸ்-ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமுக்கு மர்ம நபர் ஒருவர், ஆபாசக் குறுஞ்செய்திகள் மற்றும் புகைப்படங்களை அனுப்பி வருவதாக அடையாறு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அடையாறு சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.