குடும்பத்தினருடன் விஜய்யை சந்தித்த நடிகை ரம்பா!

நடிகை ரம்பா தனது குடும்பத்துடன் சென்று நடிகர் விஜய்யை சந்தித்துள்ளார்.  இது தொடர்பான புகைப்படங்களை ரம்பா இணையத்தில் பகிர்ந்துள்ளார். நடிகர் விஜய் லியோ படத்தைத் தொடர்ந்து தற்போது ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (G.O.A.T.…

நடிகை ரம்பா தனது குடும்பத்துடன் சென்று நடிகர் விஜய்யை சந்தித்துள்ளார்.  இது தொடர்பான புகைப்படங்களை ரம்பா இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

நடிகர் விஜய் லியோ படத்தைத் தொடர்ந்து தற்போது ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (G.O.A.T. – Greatest Of All Times) படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.  இத்திரைப்படத்தில் நடிகர்கள் ஜெயராம்,  பிரபு தேவா,  மோகன்,  பிரசாந்த்,  வைபவ்,  சினேகா,  லைலா,  மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இன்னும் ஒரு படத்துடன் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட இருக்கிறார் விஜய்.  இந்த நிலையில், நடிகை ரம்பா தனது குடும்பத்துடன் சென்று நடிகர் விஜய்யை சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை நடிகை ரம்பா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “பல ஆண்டுகளுக்குப் பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. எல்லாம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

நடிகை ரம்பா 90ஸ் களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். உள்ளத்தை அள்ளித்தா என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான ரம்பா, தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 2010ல் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட ரம்பா சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகினார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வந்தார். நடிகை ரம்பா விஜயும், நினைத்தேன் வந்தாய், என்னென்றும் காதல், மின்சார கண்ணா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.