அமரன் படம் வரும் அக்டோபர் 31, தீபாவளி அன்று வெளியாகவுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் தனது 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்திருக்கிறார். சாய் பல்லவி நாயகியாக நடித்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
இப்படம், ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று அமரன் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படத்தை செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், அமரன் வருகிற அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. தீபாவளி வெளியீடாக திரைக்கு வருவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
View this post on Instagram







