நடிகை கீர்த்தி சுரேஷூக்கு விரைவில் திருமணம் என்ற செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் மலையாள தயாரிப்பாளர் சுரேஷ் மற்றும் நடிகை மேனகாவின் மகள் ஆவார். தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நடித்த ரஜினிமுருகன், ரெமோ போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து தமிழில் விஜய், சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் மறைந்த பழம் பெரும் நடிகையான சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் மாகநதி படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் இவருக்கு சினிமாத் துறையில் திருப்புமுனையாக அமைந்தது.
இதனிடைய கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து அவ்வப்போது வதந்திகள் பரவி வந்தது. கீர்த்தி சுரேஷூக்கும், கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தகவல் வெளியானது. ஆனால் இதை கீர்த்தி சுரேஷ் மறுத்தார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கீர்த்தி சுரேஷின் பெற்றோர் அவருக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டதாகவும், கீர்த்தி சுரேஷ் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக திருநெல்வேலி திருக்குறுங்குடியில் அமைந்துள்ள அவர்களின் பூர்வீக வீட்டிற்கு சென்றும், அங்குள்ள குலத்தெய்வ கோவிலுக்கும் குடும்பத்துடன் சென்று வந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால் இந்த திருமண செய்தி குறித்து கீர்த்தி சுரேஷ் தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் உறுதி செய்யப்படவில்லை.







