கர்நாடகாவில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் வயிற்றிலிருந்து 187 நாணயங்கள் அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் பாகல்கோட் நகரில் கனஹல்ஸ்ரீ குமரேஸ்வர் மருத்துவமனையில் கடுமையான வயிற்று வலியுடன் தயமப்பா என்பவர் அனுமதிக்கப்பட்டார். அவரது வயிற்றை எக்ஸ்ரே செய்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வயிற்றின் உள்ளே ஏராளமான நாணயங்கள் இருப்பதை பார்த்த மருத்துவர்கள் உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது தயமப்பா வயிற்றிலிருந்து 187 நாணயங்களை அகற்றினர். 5 ரூபாய் நாணயங்கள் 56, 2 ரூபாய் நாணயங்கள் 51, ஒரு ரூபாய் நாணயங்கள் 80 என மொத்தம் 187 நாணயங்கள் தயமப்பா வயிற்றிலிருந்து அகற்றப்பட்டன. அவற்றின் மொத்த எடை ஒன்றரை கிலோ என தெரியவந்தது.
மனநிலை பாதிக்கப்பட்டிருந்த தயமப்பாவிடம் நாணயங்களை விழுங்கும் பழக்கம் இருந்துள்ளது. கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக 187 நாணயங்களை அவர் விழுங்கியதும் தெரியவந்துள்ளது.