கேரள மகளிர் கிரிக்கெட் அணியுடன் கைகோர்த்த நடிகை கீர்த்தி சுரேஷ்!

கேரள மாநிலத்தின் மகளிர் கிரிக்கெட் அணியின் தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டிருக்கிறார். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கேரள கிரிக்கெட் சங்கம்(கேசிஏ) நிகழ்வில்,  மகளிர் அணிக்கான விளம்பர தூதராக கீர்த்தி சுரேஷ் பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து, …

கேரள மாநிலத்தின் மகளிர் கிரிக்கெட் அணியின் தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கேரள கிரிக்கெட் சங்கம்(கேசிஏ) நிகழ்வில்,  மகளிர் அணிக்கான விளம்பர தூதராக கீர்த்தி சுரேஷ் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தொடர்ந்து,  திருவனந்தபுரத்தில் வரும் 26-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா – ஆஸ்திரேலியா டி20 போட்டிக்கான இணையதள டிக்கெட் விற்பனையையும் கீர்த்தி சுரேஷ் தொடங்கி வைத்தார்.

பின்னர் தேசிய அணிக்காக முதல் தரப் போட்டிகளில் விளையாட தகுதி பெற்ற கேரளத்தை சேர்ந்த வீராங்கனை மின்னு மணியை வாழ்த்திப் பாராட்டினார்.  மேலும், கேரள மகளிர் கிரிக்கெட் அணியின் ஆடையை அணிந்து கொண்டு வீராங்கனைகளுடன் கீர்த்தி சுரேஷ் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.