தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்படும் எனக் கூறி மக்கள் நீதி மையம் வேட்பாளருக்கு ஆதரவாக நடிகை கஸ்தூரி பரப்புரையில் ஈடுபட்டார்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளதால் அரசியல் கட்சிகள் பரப்பரபாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. திரைத்துறை பிரபலங்களான நமிதா, கார்த்திக், கஞ்சா கருப்பு, செந்தில் ஆகியோர் பரப்புரை மேற்கொண்டனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்து நடிகை கஸ்தூரி வாக்கு சேகரித்தார்.
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளராக பி.டி.செல்வகுமார் போட்டியிடுகிறார். அந்த தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தீவிரமாக வாக்குசேகரிப்பில் அவர் ஈடுபட்டார்.
வேட்பாளர் செல்வகுமாருக்கு ஆதரவாக நடிகை கஸ்தூரி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய கஸ்தூரி, தமிழ்நாட்டில் படித்த இளைஞர்களுக்கு இரண்டே ஆண்டுகளில் வேலைவாய்ப்பை மக்கள் நீதி மய்யம் கட்சி உருவாக்கி தருவதாக கூறினார்.







