பிளாஸ்டிக் சர்ஜரி (அறுவை சிகிச்சை) செய்து கொண்ட கன்னட சின்னத்திரை நடிகை சேத்தனா ராஜ் உயிரிழந்துள்ளார்.
திரைத்துறையில் பிளாஸ்டிக் சர்ஜரி என்பது மிகவும் சாதாரணமாக ஒன்றாக இருக்கிறது. நடிகர், நடிகைகள் தங்களின் அழகை மெருகூட்ட பிளாஸ்டிக் சர்ஜரி மேற்கொள்வர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், 21 வயதான சேத்தனா ராஜ் எனும் கன்னட சின்னத்திரை நடிகை தனது பெங்களூருவின் ராஜாஜி நகரில் இயங்கி வரும் ஒரு தனியார் மருத்துவமனையில் ‘Fat-Free’ பிளாஸ்டிக் சர்ஜரிக்காக நேற்று காலை (மே 16) அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அவருக்கு மயக்க மருந்து கொடுத்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை எனத் தெரிகிறது. அறுவை சிகிச்சை முடிந்த சில மணி நேரத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.
தொடர்ந்து உடனடியாக சேத்தனா ராஜை அருகே இருந்த வேறொரு மருத்துவமனைக்கு சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் கொண்டு சென்றுள்ளனர். அப்போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சேத்தனா ராஜ் இறந்துவிட்டதாக கூறி, போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். அத்துடன் அவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது குறித்த தகவலையும் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.
மேலும், சேத்தனா அறுவை சிகிச்சை குறித்து பெற்றோர்களிடம் தெரிவிக்காமல் தனது நண்பர்களுடன் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த் அவரது பெற்றோர்கள் தனது மகளின் மரணம் மருத்துவர்களின் அலட்சியத்தால் ஏற்பட்டது என புகார் தெரிவித்துள்ளனர்.