முக்கியச் செய்திகள் தமிழகம்

ஐடிஐ முடித்தவர்களுக்கு 10,12ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க அரசாணை வெளியீடு

ITI முடித்தவர்களுக்கு 10, 12-ம் வகுப்புக்கு இணையான சான்று வழங்க அரசாணை
வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் உள்ள ITI-களில் படித்து விட்டு, மேற்படிப்பைத் தொடர முடியாத
சூழ்நிலையில், ITI-களில் படிப்பவர்களுக்கு 10 மற்றும் 12-ம்
வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும் என்று தொழிலாளர் நலன் – திறன்
மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அமைச்சரின் அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, 8-ம் வகுப்புக்குப் பின்
ITI-களில் சேர்ந்து படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு 10-ம் வகுப்புக்கு
இணையான சான்றிதழும், 10-ம் வகுப்புக்கு பின் ITI சேர்ந்து படிப்பை முடிக்கும்
மாணவர்களுக்கு 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் பள்ளிக்கல்வித்துறை மூலம்
வழங்கப்படும் என்று தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் அரசாணை
வெளியிடப்பட்டுள்ளது.

ITI பயிலும் மாணவர்கள் உயர்கல்வியை தொடரும் வகையிலேயே இணை சான்று
வழங்கப்படுவதாகவும், இது அரசு வேலைவாய்ப்புக்கோ அல்லது இதர வேலைவாய்ப்புக்கோ
பொருந்தாது என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நான்கே மாதங்களில் கோடிக்கணக்கான ரூபாயை நன்கொடையாக வழங்கிய மெக்கன்சி ஸ்காட்!

Jayapriya

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு மாணவர்கள்: நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை

Arivazhagan Chinnasamy

அதிமுக தேர்தல் அறிக்கைக்கு ராமதாஸ் வரவேற்பு!

Gayathri Venkatesan