முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

நடிகர் யோகி பாபு வீட்டில் புது வரவு!

நகைச்சுவை நடிகர் யோகி பாபுவுக்கு பெண்குழந்தை பிறந்துள்ளது. திரைத்துறையினர் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர், கதாநாயகன், குணச்சித்திர நடிகர் என அனைத்து கதாபாத்திரங்களிலும் கால்பதித்தவர் நடிகர் யோகிபாபு. இவருக்கும் மஞ்சு பார்கவி என்பவருக்கும் கடந்த 2020ம் ஆண்டு எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கடந்த ஆண்டு யோகிபாபு-மஞ்சு பார்கவி தம்பதியருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. சமீபத்தில் அக்குழந்தையின் முதலாம் ஆண்டு பிறந்தநாளை அவர்கள் கோலாகலமாக கொண்டாடினர். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வரலானது.

இந்நிலையில் தீபாவளித் திருநாளான இன்று யோகி பாபுவுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து யோகி பாபுவுக்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஒலியை விட 9 மடங்கு வேகமாக செல்லக்கூடிய ரஷ்யாவின் ‘சிர்கான்’ ஏவுகணை சோதனை வெற்றி

Vandhana

லாலு கட்சி எம்பிக்களின் வீடுகளில் சிபிஐ சோதனை

Mohan Dass

பேடிஎம், கூகுள் பே மூலம் சட்டவிரோதமாக மது விற்பனை

EZHILARASAN D