“தலைமையை தேர்ந்தெடுப்பது நமது விரல் மை”: நடிகர் விவேக் வெளியிட்ட வீடியோ!

“ஒவ்வொரு ஆளுமை மற்றும் தலைமையைத் தேர்ந்தெடுப்பது நமது விரல் மை, அதுதான் நமது ஜனநாயகத்தின் வலிமை” என வாக்களிப்பது குறித்து நடிகர் விவேக் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் 234…

ஒவ்வொரு ஆளுமை மற்றும் தலைமையைத் தேர்ந்தெடுப்பது நமது விரல் மை, அதுதான் நமது ஜனநாயகத்தின் வலிமை” என வாக்களிப்பது குறித்து நடிகர் விவேக் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்நிலையில், நடிகர் விவேக் தேர்தலில் வாக்களிக்கும் முக்கியத்துவத்தை அனைத்து வேட்பாளர்களுக்கும் எடுத்துரைத்து விழிப்புணர்வு விடியோ பதிவு ஒன்றை அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து நடிகர் விவேக் வெளியிட்டுள்ள காணோலியில்,

“ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நமக்கு கிடைக்ககூடிய மிகப்பெரிய ஜனநாயக கடமை, உரிமை வாக்களிப்பது. ஒவ்வொரு வாக்கும் நமது உரிமை அதை நாம் விட்டு தரவே கூடாது. நாம் ஒருவர் வாக்களிப்பதினால் நாட்டில் என்ன மாற்றம் நிகழப்போகிறது என்று நினைத்து வாக்களிக்காமல் இருப்பது இந்த ஜனநாயகத்திற்கு நாம் செய்யும் மிகப்பெரிய தீங்காகும்.

ஒவ்வொரு ஆளுமை மற்றும் தலைமையைத் தேர்ந்தெடுப்பது நமது விரல் மை. அதுதான் நமது ஜனநாயகத்தின் வலிமை. ஆகையால் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.