வடிவேலு மீண்டும் நடிக்க வருவதை வரவேற்கிறேன்: விஷால்

நடிகர் வடிவேலு மீண்டும் நடிக்க வருவதை அவரது ரசிகனாக வரவேற்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். நடிகர் விஷாலுக்கு இன்று 44-வது பிறந்த நாள். இதையடுத்து தனது பிறந்த நாளை, கீழ்ப்பாக் கத்தில் உள்ள முதியோர்…

நடிகர் வடிவேலு மீண்டும் நடிக்க வருவதை அவரது ரசிகனாக வரவேற்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷாலுக்கு இன்று 44-வது பிறந்த நாள். இதையடுத்து தனது பிறந்த நாளை, கீழ்ப்பாக் கத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் கொண்டாடினார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் வடிவேலு மீண்டும் நடிக்க வருவதை அவரது ரசிகனாக வரவேற்பதாக தெரி வித்தார்.

மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் உள்ளிட் டோரால் சினிமா துறைக்கு முன்னேற்றம் கிடைக்கும் என நம்பிக்கைத் தெரிவித்த அவர், தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றும் என நம்புவதாக தெரிவித்தார்.

நடிகர் சங்க வழக்கு நிலுவையில் இருப்பதால் கொரோனா காலத்தில் உயிரிழந்தவர்களுக்கு உதவ முடியவில்லை எனவும் விஷால் கூறினார். மு.க.ஸ்டாலின், சிறப்பாக ஆட்சி செய்வதாக கூறிய அவர், ஐதராபாத்தில் கூட ஸ்டாலின் ஆட்சி குறித்து பேசுவதாகத் தெரிவித்தார். திமுகவிற்கு ஆதரவாக பேசுவதால் தாம் அதிமுகவிற்கு எதிரானவன் என நினைக்க வேண்டாம் எனவும் விஷால் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.