முக்கியச் செய்திகள் சினிமா

வெப்சீரிஸ் படப்பிடிப்பில் விபத்து: நடிகை பிரியங்கா சோப்ரா காயம்

நடிகை பிரியங்கா சோப்ரா, படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தார். அந்த புகைப் படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பகிரிந்துள்ளார்.

பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, இப்போது ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத் தி வருகிறார். குவாண்டிகோ என்ற டி.வி சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபல மான அவர், அமெரிக்க சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

தன்னைவிட 10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் மற்றும் நிக் ஜோனாசை காதலித்து திருமணம் செய்துகொண்ட பிரியங்கா சோப்ரா, திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வருகிறார். அவர் இப்போது தனது வெப்சீரிஸில் நடித்து வருகிறார். சிட்டாடல் என்ற இந்த வெப்சீரிஸை ரூசோ சகோதரர்கள் இயக்குகிறார்கள்.

இந்த தொடரில் ஆக்‌ஷன் வேடத்தில் நடிக்கும் பிரியங்கா சோப்ரா, படப்பிடிப்பில் நடந்த விபத்தில் சிக்கியுள்ளார். இதில் அவர், நெற்றி மற்றும் கன்னத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. நெற்றியில் வெட்டு ஏற்பட்டு ரத்தம் சொட்டும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் வேகமாக பரவிவருகிறது.

Advertisement:
SHARE

Related posts

கொரோனா கட்டுப்பாட்டை மீறி மீன்பிடித் திருவிழாவில் குவிந்த மக்கள்

Vandhana

திமுக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும்?

Saravana Kumar

அருப்புகோட்டையில் ஆன்லைன் வகுப்பில் புறக்கணிக்கப்படும் மாணவர்கள்!

Jeba Arul Robinson