கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.ஆர். விஜயபாஸ்கரை ஆதரித்து, நடிகை விந்தியா தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோன்றிமலை, நெரூர் பகுதிகளில் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மக்களுக்காக உழைத்தவர் என தெரிவித்தார்.
மேலும், எப்படியாவது மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வர திமுக துடிக்கிறது என்று கூறிய அவர், அதிமுகவின் தேர்தல் அறிக்கை வெற்றியை நோக்கமாக கருதாமல், மக்கள் நலனுக்கான திட்டங்களை கருத்தில் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.







