ஒரே நாளில் 62,258 பேர் கொரோனாவால் பாதிப்பு!

இந்தியா முழுவதிலும் கடந்த 24 மணி நேரத்தில் 62,258 பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.19 கோடியைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்திய…

இந்தியா முழுவதிலும் கடந்த 24 மணி நேரத்தில் 62,258 பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.19 கோடியைக் கடந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்திய அளவில் 62,258 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.19 கோடியைக் கடந்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 290 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,61,240 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த வருடம் ஜனவரி மாதம் இந்தியாவில் கொரோனா பரவத்தொடங்கியது. தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களில் இந்திய அளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. 4.52 லட்சத்திற்கும் அதிகமானோர் நாடு முழுவதிலும் கொரோனாவால் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 60% பேர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள். மாநிலங்ள் அளவில் மகாராஷ்டிராவில்தான் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நாளை முதல் மகாராஷ்டிராவில் இரவில் மட்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.