முக்கியச் செய்திகள் தமிழகம்

விஜய் பிறந்தநாள் : உறுப்பினர் சேர்க்கை தீவிரம்

நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் ஆன் லைன் உறுப்பினர் சேர்க்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

நடிகர் விஜய்க்கு நீண்ட நாட்களவே அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக உள்ளது. அதனுடைய எதிரொலியாக அவருடைய விஜய் மக்கள் இயக்கம் உள்ளாட்சி தேர்தலில் களம் கண்டு கணிசமான இடங்களில் வென்றனர். மேலும் இந்த இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதில் விஜய் ஆர்வமாக இருப்பதாக அவரது ரசிகர்கள் கூறுகின்றனர். அதற்காக விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் பல துணை அணிகள் உள்ளன. அவைகள், மகளிரணி, விவசாய அணி, மாணவரணி, இளைஞரணி, தொண்டரணி, வர்த்தகர் அணி, மாணவரணி என ஒன்பது அணிகள் உள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இவற்றில் உறுப்பினராக சேர வேண்டும் என்றால் கூகுள் பிளே ஸ்டோரில் சென்று விஜய் மக்கள் இயக்கம் என்ற ஆப்பை டவுன்லோடு செய்ய வேண்டும். அவற்றில் புதிய உறுப்பினர் என்றால் சைன் அப் என்ற பகுதியை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் அவற்றில் கேட்கப்படும் தொலைபேசி எண், பெயர், இ-மெயில்  ஐடி மற்றும் பிறந்த தேதி போன்ற விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.

அதன்பின்னர் விஜய் மக்கள் இயக்கத்தில் எந்த அணியில் இணைய விருப்பம் என்பதையும் தெரிவிக்க வேண்டும். மேற்கண்ட இந்த தகவல்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பொறுப்பாளர்களுக்கு பதிவு செய்தவரை பற்றிய முழுத் தகவல்களும் சென்றடையும் வண்ணம் அந்த ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பதிவு செய்தவர் கூறிய தகவல்கள் உண்மைதானா என்பதை முழுமையாக ஆராய்ந்த பின்னர் பதிவு செய்தவருக்கு ஐடி கார்டு கொடுக்கின்றனர்.

இதுகுறித்து பேசிய நெல்லை மத்திய மாவட்ட மாணவரணி தலைவர் ஜெயராம் கூறியதாவது, எங்களது தலைவர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறோம். வரும் ஞாயிறு அன்று பாளையங்கோட்டையில் எங்கள் அணி சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளோம். அதேநேரத்தில் நாங்கள் இந்த பிறந்தநாளில் அதிக உறுப்பினர்களை சேர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகிறோம். எங்க தளபதியின் கரத்தை வலுப்படுத்துவது அவருக்காக அல்ல. மக்களின் நலனுக்காக என அரசியல் தெறிக்க வார்த்தைகளை கொட்டினார்.

விஜய் மக்கள் இயக்க ஆப்பில் இணைபவர்கள் தமிழ்நாடு மட்டுமின்றி, மலேசியா, கனடா, சிங்கப்பூர் வெளிநாடுகளில் உள்ளவர்களும் இணையும் வண்ணம் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.  அதேபோல், டெல்லி, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபாரை சேர்ந்தவர்களும் இணையலாம்.

விஜய் மக்கள் இயக்கத்தில் எத்தனை உறுப்பினராக உள்ளனர் என்ற புள்ளிவிபரங்களை எல்லாம் மாநில நிர்வாகிகள் தொடர்ந்து கவனித்து வருவதாக தெரிகிறது. அதிக உறுப்பினர்களை சேர்க்கும் அணியினருக்கு உரிய முக்கியத்துவம் உரிய நேரத்தில் கொடுக்கப்படும் என நிர்வாகிகள் கொடுக்கின்றனர்.

விஜய் நேரடியாக அரசியலுக்கு வருவார் என்ற கேள்விக்கு விரைவில் விடை தெரியும் என அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர். இவரும் நடிகர் ரஜினிகாந்த் போல் நடந்து கொள்ள கூடாது என்பதே ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.

இராமானுஜம்.கி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

RCBvsSRH: ஆறுதல் வெற்றி பெறுமா ஹைதராபாத்?

Saravana Kumar

108 ஆம்புலன்ஸ் விபத்தில் கர்ப்பிணி உட்பட 2 பேர் உயிரிழப்பு!

திமுக அரசின் முயற்சிகளுக்கு விசிக உறுதுணையாக இருக்கும்: திருமாவளவன்

Ezhilarasan