முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

ரோல்ஸ் ராய் கார் விவகாரம்: நடிகர் விஜய் மேல்முறையீடு

தான் வாங்கிய ரோல்ஸ் ராய் காருக்கு நுழைவு வரியில் இருந்து விலக்களிக்க கோரிய வழக்கில், நடிகர் விஜய் மேல் முறையீடு செய்துள்ளார்.

நடிகர் விஜய், கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த சொகுசு காருக்கு வணிக வரிதுறை நுழைவு வரி விதித்தது. இதை எதிர்த்தும், வரி விதிக்கத் தடை கோரியும் நடிகர் விஜய் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், நடிகர்கள் நிஜ வாழ்விலும் ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது. வரி செலுத்துவது நன்கொடை போன்றது அல்ல, நாட்டி ற்கு குடிமகன்கள் செய்ய வேண்டிய கட்டாய பங்களிப்பு. சமூக நீதிக்கு பாடுபடுவதாக கூறிக் கொள்ளும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என கண்டனம் தெரிவித்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்த அவர், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார்.

இந்நிலையில், ரூ.1 லட்சம் அபராதம் விதித்தை எதிர்த்து நடிகர் விஜய் மேல் முறையீடு செய்துள்ளார். தனி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த தீர்ப்பின் நகல் இல்லாமல் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு பட்டியலிடக் கோரியும் நடிகர் விஜய் அந்த மேல்முறையீட்டில் கூறியுள்ளார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் சுந்தரேஷ், மஞ்சுளா அமர்வில் திங்கட்கிழமை விசாரணைக்கு பட்டியல் இடப்பட்டுள்ளது. தீர்ப்பில் தன்னை பற்றி குறிப்பிட்டுள்ள விமர்சனங்களை நீக்கவும் நடிகர் விஜய் கோரிகை வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.134 குறைந்தது

Arivazhagan Chinnasamy

திருமணமான 10 நாட்களில் புதுமணப்பெண் காதலனுடன் ஓட்டம்!

EZHILARASAN D

’சொன்னபடி முடி வெட்டலை’: பிரபல மாடலுக்கு ரூ.2 கோடி இழப்பீடு

EZHILARASAN D