முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

வருமான வரிக்கு வட்டி தள்ளுபடி கோரிய நடிகர் சூர்யாவின் மனு தள்ளுபடி

வருமான வரிக்கு வட்டி செலுத்துவதில் இருந்து விலக்கு கோரி நடிகர் சூர்யா தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நடிகர் சூர்யா வீட்டில் கடந்த 2010ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. சோதனை முடிவில் 2007-2008 ம் ஆண்டு மற்றும் 2008-2009 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான வருமான வரியை மதிப்பீடு செய்து, 2011 ம் ஆண்டு வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து வருமான வரித்துறை தீர்ப்பாயத்தில் சூர்யா தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வருமான வரி தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குகளை விசாரித்த வருமான வரித்துறையின் மேல்முறையீட்டு தீர்ப்பாயம், 2007-08, 2008-09 ம் ஆண்டுளுக்கு 3 கோடியே 11 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்ற வருமான வரித்துறை மதிப்பீட்டு அதிகாரியின் உத்தரவை உறுதி செய்தது. இந்நிலையில், மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் தனது வழக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு முடிவு காணப்பட்டதால்,வருமான வரி சட்டப்படி மாதம் ஒரு சதவீதம் வட்டி வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என, கடந்த 2018ஆம் ஆண்டு நடிகர் சூர்யா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சோதனை நடந்த 45 நாட்களுக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும், ஆனால் சூர்யா தாமதமாகவே கணக்கை தாக்கல் செய்தார் என வருமான வரித்துறை தரப்பில் வாதிடப்பட்டது. வருமான வரி மறுமதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு சூர்யா முழு ஒத்துழைப்பு தரவில்லை எனவும், சோதனைக்கு பிறகு வருமானம் குறித்த முழு விவரங்களை அளிக்கவில்லை என்பதால்,  வருமான வரி சட்டப்படி, வட்டி விலக்கு பெற சூர்யாவுக்கு உரிமை இல்லையென என்றும் வருமானவரி தரப்பில் வாதிடப்பட்டது.

வருமான வரித்துறையின் இந்த வாதத்தை ஏற்று கொண்ட நீதிபதி, நடிகர் சூர்யா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Advertisement:
SHARE

Related posts

சட்டவிரோதமாக நடத்திய பார்; லஞ்சம் வாங்கிய காவலர்

Saravana Kumar

பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும்: விவசாயிகள் திட்டவட்டம்!

Saravana

வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள படங்களை நீக்க உத்தரவு

Halley karthi