முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

உட்கட்சி தேர்தல் நடத்த அதிமுக முடிவு

உட்கட்சி தேர்தல் நடத்த அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப் பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

சட்டமன்ற தேர்தலில் அடைந்த தோல்விக்கு பின்னர் ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் நடைபெற்று வரும் முக்கிய ஆலோசனைக் கூட்டம் என்பதால், அதிமுகவின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள், வியூகங்கள் குறித்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வெளியிடப்பட்டன. அதில், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்பது உட்பட 6 தீர்மானங்கள் இயற்றப்பட்டுள்ளன.

இதற்கிடையே உட்கட்சி தேர்தல் நடத்த அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதை அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

குழந்தைகள் ஆபாசப் படங்களை ஒருவாரத்தில் நீக்க வேண்டும்: டிவிட்டருக்கு பெண்கள் ஆணையம் உத்தரவு

Halley karthi

நாடு முழுவதும் கொரோனாவால் ஒரே நாளில் 533 பேர் உயிரிழப்பு

Halley karthi

பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டம் உறுதி

Halley karthi