சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் நடிகர் #Rajinikanth

உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்காக விசாகப்பட்டினத்தில் நடந்து வரும் படப்பிடிப்பில் கலந்து…

Actor Rajinikanth returned home after treatment

உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்காக விசாகப்பட்டினத்தில் நடந்து வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினி, கடந்த சில நாட்களுக்கு முன்புதான் சென்னை திரும்பினார். இந்நிலையில் செப்.30-ம் தேதி நள்ளிரவு உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிறு பகுதியில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எனக் கூறப்பட்டது.

தொடர்ந்து, இதயத்தில் இருந்து பிரியும் ரத்த நாளத்தில் வீக்கம் இருந்ததால் ஸ்டென்ட் பொருத்தி வீக்கத்தை நிறுத்தியதாகவும், ரஜினிகாந்தின் உடல்நிலை தற்போது சீராகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் என்று அப்பல்லோ மருத்துவமனை அறிவித்தது.

இதையும் படியுங்கள் :#Weatherupdate – தமிழ்நாட்டில் இன்று பல பகுதிகளில் மழை! -வானிலை ஆய்வு மையம் தகவல்…

இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் நேற்று( அக் – 3ம் தேதி) டிஸ்சார்ஜ் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியன நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நேற்று நள்ளிரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சிகிச்சை முடிந்த நிலையில் நள்ளிரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ரஜினிகாந்த் வீடு திரும்பினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.