ரசிகர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த்!

சென்னை போயஸ் கார்டனில் தனது வீட்டின் முன் கூடிய ரசிகர்களை நேரில் சந்தித்து நடிகர் ரஜினிகாத் புத்தாண்டு வாழ்த்துகள் கூறினார். உலகம் முழுவதும் மக்கள் பட்டாசு வெடிப்பது,  குடும்பங்களுடன் கோயில்களுக்கு செல்வது என உற்சாகத்துடன்…

சென்னை போயஸ் கார்டனில் தனது வீட்டின் முன் கூடிய ரசிகர்களை நேரில் சந்தித்து நடிகர் ரஜினிகாத் புத்தாண்டு வாழ்த்துகள் கூறினார்.

உலகம் முழுவதும் மக்கள் பட்டாசு வெடிப்பது,  குடும்பங்களுடன் கோயில்களுக்கு செல்வது என உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர்.  இந்நிலையில் தமிழ்நாடு முழுவதிலும் பல பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டின.  கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.  பிரார்த்தனைகளில் அனைவரும் குடும்பங்களுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில்,  பொதுமக்களுக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலர் பொதுமக்களுக்கு தங்களது புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர். இதே போன்று ரசிகர்கள் தங்களது ஆதர்சன கதாநாயகர்களை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறனர். அப்படி சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் வீட்டின் முன் கூடிய அவரது ரசிகர்கள் புத்தாண்டு வாழ்த்து சொல்ல காத்திருந்தனர்.

இந்நிலையில்,  தன் வீட்டின் முன் கூடிய ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.  இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்தனர். மேலும் ரஜினிகாந்தின் இல்லத்தின் முன் கேக் வெட்டியும் ரசிகர்கள் புத்தாண்டை கொண்டாடினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.