திருப்பதி சென்ற கையோடு தர்காவிலும் வழிபாடு செய்த நடிகர் ரஜினிகாந்த்

ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள அமின் தர்காவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுடன் ரஜினிகாந்த் வழிபாடு செய்தார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் ரஜினிகாந்த், தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில்…

ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள அமின் தர்காவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுடன் ரஜினிகாந்த் வழிபாடு செய்தார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் ரஜினிகாந்த், தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். கடந்த டிசம்பர் 12ஆம் தேதி ரஜினிகாந்த் தனது 73வது பிறந்தநாளை கொண்டாடினார்.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம் செய்தார். நேற்றிரவு திருப்பதி சென்றடைந்த அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பான வரவேற்பை அளித்தனர். பின்னர், இன்று அதிகாலை ரஜினிகாந்த தனது மகள் ஐஸ்வர்யாவுடன் கோயிலில் வழிபாடு நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுடன் கடப்பாவில் உள்ள அமின் தர்காவில் ரஜினிகாந்த் வழிபாடு செய்தார். தர்காவிற்கு வருகை தந்த நடிகர் ரஜினிகாந்திற்கும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கும், தர்கா நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.