உயிரிழந்த ரசிகர்.. குடும்பத்தினருக்கு நடிகர் கார்த்தி ஆறுதல்!

தனது ரசிகர்  இறந்த செய்தியறிந்து நேரில் சென்று அவரது குடும்பத்தாருக்கு நடிகர் கார்த்தி ஆறுதல் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் பாபு. இவர் நடிகர் கார்த்தி ரசிகர் மன்றத்தின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் ஆவார்.…

தனது ரசிகர்  இறந்த செய்தியறிந்து நேரில் சென்று அவரது குடும்பத்தாருக்கு நடிகர் கார்த்தி ஆறுதல் கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் பாபு. இவர் நடிகர் கார்த்தி ரசிகர் மன்றத்தின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் ஆவார். கடந்த பிப்.3 ஆம் தேதி உடல்நல குறைவால் பாபு உயிரிழந்துள்ளார். அந்த சமயத்தில் நடிகர் கார்த்தி படத்தின் படப்பிடிப்புக்காக வெளியூர் சென்று இருந்தார். தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்து இருக்கும் நிலையில் கார்த்தி சென்னை திரும்பி உள்ளார்.

இந்நிலையில் நடிகர் கார்த்தி சென்னை திரும்பியவுடன்  உயிரிழந்த தன் ரசிகர் மன்ற செயலாளர் வீட்டிற்கு நேரில் சென்று அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தை சந்தித்தார். கதறி அழுத அந்த குடும்பத்திற்கு கார்த்தி ஆறுதல் கூறினார். இதற்கு முன்னரும் இதுபோல அவரின் ரசிகர் இறப்பிற்கும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். எப்பொழுதுமே தனது ரசிகர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பவராக நடிகர் கார்த்தி உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.