ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் சென்னை மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன. உத்தரபிரதேசத்தின் எகானா மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இரவு 7: 30 மணிக்கு தொடங்குகின்றன.
சென்னை அணி இது வரை தான் விளையுள்ள 11 போட்டிகளில் 6 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் பெற்று புள்ளி பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது. மேலும் கடைசியாக விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
காயம் காரணமாக ஓவர் டன் தொடரில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக சௌத் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் டையான் ஃபாரெஸ்டர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மறுபுறம் லக்னோ அணியை பொறுத்தவரை 11 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளையும் 8 தோல்விகளையும் பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதிலும் கடைசியாக விளையாடிய மூன்று போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையே கடந்த 10 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் லக்னோவை 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தி இருந்தது.







