பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் 44 புறநகர் ரயில்கள் இன்று ரத்து…!

சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பிப்ரவரி 11ஆம் தேதி நாளை 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோடம்பாக்கம் மற்றும் தாம்பரம் இடையே நாளை…

சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பிப்ரவரி 11ஆம் தேதி நாளை 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கோடம்பாக்கம் மற்றும் தாம்பரம் இடையே நாளை காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை பராமரிப்பு பணி நடைபெறுவதால் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு மற்றும் அரக்கோணத்திற்கு காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை இயக்கப்படும் 22 மின்சார ரயில்களும், மறு மார்க்கமாக தாம்பரம் மற்றும் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 10.05 மணி முதல் மாலை 4.30 மணி வரை இயக்கப்படும் 20 மின்சார ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றது.

அதனைப் போலவே காஞ்சிபுரத்திலிருந்து காலை 9.30 மணிக்கு புறப்படும் மின்சார ரயிலும் திருமால்பூரில் இருந்து காலை 11.05 மணிக்கு புறப்படக்கூடிய மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. அதேசமயம் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.