நாடாளுமன்ற தேர்தல்- திமுக வார் ரூம் அறிவிப்பு…!

நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தலைமைக் கழகத்தில் இருந்து ஒருங்கிணைக்க திமுக சார்பில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது.  நாடாளுமன்ற தேர்தல் தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி…

நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தலைமைக் கழகத்தில் இருந்து ஒருங்கிணைக்க திமுக சார்பில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற தேர்தல் தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தொகுதி பங்கீடு குறித்து பேசவும், தேர்தல் அறிக்கை தயார் செய்யவும் தி.மு.க. 3 குழுக்களை அமைத்துள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க தி.மு.க. சார்பில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திமுக  வெளியிட்ட அறிவிப்பில்,  “தொகுதி பார்வையாளர்கள் ஒருங்கிணைப்பு, பூத் கமிட்டி, பரப்புரை மேற்பார்வை ஆகியவற்றை தி.மு.க. இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை மேற்கொள்வார்.

ஊடக விவாத குழு, நட்சத்திர பேச்சாளர்கள் பரப்புரை போன்ற பணிகளை மேற்கொள்ள தி.மு.க. துணை அமைப்பு செயலாளர் ஆஸ்டின் தலைமையிலான குழு செயல்படும். சட்டக் குழு மற்றும் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தி.மு.க. சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி தலைமையிலான குழு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு வார் ரூம் அமைக்கப்படும்” எனவும் தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.