மதுரையில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட ஜெயம் ரவி!

‘சைரன்’ திரைப்படம் இன்று (பிப்.16) திரையரங்குகளில் வெளியானதை தொடர்ந்து, நடிகர் ஜெயம் ரவி இன்று காலை மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.  இதனைத் தொடர்ந்து, ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அறிமுக…

‘சைரன்’ திரைப்படம் இன்று (பிப்.16) திரையரங்குகளில் வெளியானதை தொடர்ந்து, நடிகர் ஜெயம் ரவி இன்று காலை மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.  இதனைத் தொடர்ந்து, ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில்,  நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படம் ‘சைரன்’.  இத் திரைப்படத்தை சுஜாதா விஜய்குமார் தயாரித்துள்ளார்.  இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ்,  யோகி பாபு,  சமுத்திரக்கனி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

2 தோற்றங்களில் ஜெயம் ரவி நடித்துள்ள இந்த திரைப்படம் குடும்ப அம்சங்களுடன் ஆக்சன் திரில்லராக பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.  ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்திற்கு செல்வகுமார் எஸ்.கே ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பாத்திரம் மற்றும் வித்தியாசமான கதைகளங்களால் ரசிகர்களை மகிழ்வித்து, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் நடிகர் ஜெயம் ரவி.

‘சைரன்’ திரைப்படம் இன்று (பிப்.16) திரையரங்குகளில் வெளியானது.  இந்த நிலையில் நடிகர் ஜெயம் ரவி இன்று காலை மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.  இதனைத் தொடர்ந்து, ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.