நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வந்த நிலையில், தற்போது குறைந்து வருகிறது. அதைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இப்போது கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. இருந்தும் கொரோனா முழுமையாக நீங்கிவிடவில்லை.
இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனா வகையான ஒமிக்ரான் உலகம் முழுவதும் அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தொற்று வேகமாக பரவும் தன்மை கொண்டது என்பதால், அதைக்கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதற்கு நடிகர் அர்ஜுன் தனக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ள தாகத் தெரிவித்துள்ளார். சமூக வலைதளப்பக்கத்தில் இதை பகிர்ந்துள்ள அவர், மருத்துவர்களின் ஆலோசனைப்படி தனிமைப்படுத்தி கொண்டிருப்பதாகவும் தன்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
தான் ஆரோக்கியமாக இருப்பதாகவும் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் மாஸ்க் அணிவதை மறக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.








