முக்கியச் செய்திகள் இந்தியா

ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; காவலர்கள் இருவர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 2 காவலர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஸ்ரீநகரில் பந்தா செளக்கில் உள்ள சேவான் பகுதிக்கு அருகே காவல்துறை பேருந்து மீது பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் 14 காவலர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து மருத்துவமனையில் காவல்துறையினர் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் என இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்திப்பதாகவும் பிரதமர் மோடி, ஜம்மு காரஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஷா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் தெரிவித்துள்ளார்.

அதேபோல தாக்குத கண்டனம் தெரிவித்த அவர்கள், இதில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலை ஜம்மு காஷ்மீர் காவல்துறை உறுதி செய்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை – திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் தொங்குபாலம்

Gayathri Venkatesan

ஜீன்ஸ் அணிவதா? இளம் பெண்ணின் தந்தையை தாக்கியவர்கள் கைது

Halley Karthik

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: வானதி சீனிவாசன் மீது வழக்குப் பதிவு

Halley Karthik