கிராமப்புற மாணவிகளுக்கு தனிநபர் வைப்பு நிதி கணக்கு ஊக்கத்தொகை திட்டம் – அரசாணை வெளியீடு

ஒவ்வொரு கிராமப்புற மாணவியருக்கும் தனித்தனியாக தனிநபர் வைப்பு நிதி கணக்கு ஊக்கத்தொகை திட்டம் தொடங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3ம் வகுப்பு முதல் 6-ம்…

ஒவ்வொரு கிராமப்புற மாணவியருக்கும் தனித்தனியாக தனிநபர் வைப்பு நிதி கணக்கு ஊக்கத்தொகை திட்டம் தொடங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3ம் வகுப்பு முதல் 6-ம் வகுப்பு வரை பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கல்வி ஊக்கத்தொகை வழங்க ஏதுவாக அஞ்சலக சேமிப்பு கணக்குக்கு பதில், வங்கிகளில் தனிநபர் வைப்புநிதி கணக்கு தொடங்கப்படுகிறது. இதன் மூலம், ஒவ்வொரு மாணவியருக்கும் தனித்தனியாக தனிநபர் வைப்பு நிதி கணக்கு தொடங்க ஏதுவாக ரூ.16.75 கோடி நிதியை விடுவிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆண்டு வருமானம் ரூ.72,000 என்றளவில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவியருக்கு மட்டும் கல்வி ஊக்கத்தொகை நேரடியாக வங்கிக்கணக்கு மூலம் வழங்கப்பட உள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல திருத்தணியில் இன்று நடைபெறும் விழாவில், 7.56 லட்சம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.2,750 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5,500 கோடி கரோனா சிறப்புக் கடன் உட்பட ரூ.20 ஆயிரம் கோடி கடன் உறுதி செய்யப்படும், 36,218 சுய உதவிக்குழுக்கள் பயன்பெறும் வகையில் ரூ.809.71 கோடியில் ஊரக வாழ்வாதாரத் திட்டம் செயல்படுத்தப்படும் என்பன போன்ற அறிவிப்புகள் சட்டப்பேரவையில், வெளியிடப்பட்டன.

தற்போது இந்த அறிவிப்புகளை செயல்படுத்தும் நோக்கில், தமிழகம் முழுவதும் 58,463 சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 7,56,142 உறுப்பினர்களுக்கு ரூ.2,749.85 கோடி மதிப்பிலான கடன் உதவிகள், நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.