தன் அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை அமலாபால் கொடுத்த பரிசு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலாபால். தொடர்ந்து தெய்வதிருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார். ஏற்கனவே இயக்குநர் விஜயை திருமணம் செய்து பிறகு விவகாரத்து பெற்ற அமலா, சமீபத்தில் பாடகர் பவிந்தர் சிங்கை திருமணம் செய்து கொண்டார்.
இதையும் படிக்க: டாடா ஓடிடியில் வெளியாவது எப்போது?
தற்போது அம்மா கணக்கு, ஆடை, கடாவர், கிறிஸ்டோபர், டீச்சர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். முக்கியமாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைக்களங்களில் அதிகம் நடித்து வருகிறார் அமலா. சமூகவலைதளங்களில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் அவர், தொடர்ந்து பல்வேறு பதிவுகளை பதிவேற்றுவார். சமீபத்தில் அவர் இந்தோனேசியா நாட்டுக்கு பயணம் செய்திருக்கிறார்.
அப்போது அவரின் அம்மாவுக்கு பிறந்தநாள் வந்துள்ளது. இதையடுத்து அம்மாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்த அமலாபால், ஒரு மரம் நட்டுள்ளார். அதை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பதிவேற்ற அம்மாவுக்கு அர்ப்பணிப்பதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. லட்சகணக்கானோர் பார்வையிட்டு பாராட்டி பகிர்ந்து வருகின்றனர்.
-ம.பவித்ரா








