நாகாலாந்து முதலமைச்சராக 5-வது முறையாக நெய்பியு ரியோ இன்று பதவியேற்றுக் கொண்டார்.
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 18ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. திரிபுராவில் 60 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 16ம் தேதி தேர்தல் நடந்தது. அங்கு 90 சதவீத வாக்குகள் பதிவாகின. இதேபோல் 60 தொகுதிகளை கொண்ட மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே கட்டமாக 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மேகாலயாவில் 85 சதவீதமும், நாகாலாந்தில் 84 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வாக்கு எண்ணிக்கை முடிவிக், பாஜக 12 இடங்களிலும் கூட்டணி கட்சியான 25 இடங்களிலும் வெற்றி பெற்றது. வடக்கு அங்காமி தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் நெய்பியு ரியோ 17,045 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனால் ஆட்சி அமைக்க தேவையான இடங்களை விட கூடுதலான இடங்களில் பெரும்பான்மை பெற்று மீண்டும் கூட்டணி ஆட்சி அமைய வழிவகை ஏற்பட்டது.
அண்மைச் செய்தி : ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அதிஷி, செளரப் பரத்வாஜ் அமைச்சர்களாக நியமனம்
இந்நிலையில், கூட்டணி கட்சிகளின் சார்பில் எண்டிபிபி கட்சியை சேர்ந்த நெய்பியு ரியோ 5-வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார். இன்று நடைபெற்ற ஹோஹிமா நகரில் தொடங்கியது. ரியோ முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து கொண்டதுடன் ரகசிய காப்பு பிரமாணமும் எடுத்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.