முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

நடிகர் அஜித் நாம் காட்டும் அன்பை, நமக்கு பல மடங்கு திருப்பி கொடுப்பார் -நடிகை மஞ்சு வாரியர் நெகிழ்ச்சி

நடிகர் அஜித்குமாரிடம் நாம் காட்டும் அன்பை, அவர் நமக்கு பல மடங்கு திருப்பி கொடுப்பார் என நடிகை மஞ்சுவாரியர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 

 

நேர்கொண்ட பார்வை, வலிமை, ஆகிய படங்களைத் தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் மூன்றாவது படம் துணிவு. மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரம் உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ள இந்த படத்தைக் காண அஜித் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள மஞ்சு வாரியர் நேர்காணல் ஒன்றில் பேசுகையில், படப்பிடிப்பு தளத்தில் அஜித் சார் என்னிடம் பேசுவதற்கு முன்னாள் இயக்குநர்கள் என்னிடம் நிறையா பேசியுள்ளார் என்றார்.

மேலும், அவர் எல்லாருக்கும் மரியாதை கொடுப்பர். ஒரே மாதிரி நடத்துவார் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் அதை விட பலமடங்கு அன்பாக இருந்தார். எல்லார் சொன்னதும் பலமடங்கு உண்மையாக இருந்தது. நாம காட்டுற அன்பை நமக்கு பல மடங்கு திருப்பி கொடுப்பர், அதை அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன் என கூறினார்.

அத்துடன், இந்த படம் எனக்கு ரொம்ப புதுசா இருந்துச்சு. நான் இதுவரை சண்டைக் காட்சிகளை கையாண்டதில்லை. அதனால், இது ரொம்பவே புதுசா இருந்துச்சு. துணிவு திரைப்படம் ரொம்பவே கொண்டாடப்பட வேண்டிய படம். பணம் முக்கியம் தான். ஆனால் அதுவே எல்லாம் கிடையாது. இயக்குநர் வினோத்தின் படங்கள் எல்லாத்தையும் ரசித்து பார்த்துள்ளேன்.

அவர் எது பேசினாலும் படத்தை பற்றி மட்டுமே பேசுவார். அந்த அளவுக்கு அவர் படத்தில் முழு கவனத்தில் இருப்பார். இந்த படத்தில் எல்லாரும் என்னை மிகவும் பொறுமையாக, எளிமையாக கையாண்டனர். அசுரனுக்கு அப்புறம் நான் ரொம்ப நாள் ஆவலாக காத்திருந்த படம் தான் துணிவு. இந்த படத்துல என் பெயர் கண்மணி. நெறையநிரைய சண்டைக் காட்சிகள் தான் ஷூட் பண்ணி இருக்கிறோம். இந்த படத்துல பண்ண எல்லா விஷயமும் எனக்கு புதுசா இருந்துச்சு. நிறையா பலவித சண்டைக் காட்சிகளை இதுல நாங்க முயர்ச்சி பண்ணிருக்கோம். இந்த படத்தை நீங்க ரொம்பவே என்ஜாய் பண்ணுவீங்க என கூறினார்.

நான் ஒரு உணவு பிரியர். எங்க போனாலும் அந்த ஊரு உணவுகளை அதை விரும்பி சாப்பிடுவேன். வெக்கமே இல்லாமல் துப்பாக்கி பிடிக்க அஜித் கிட்ட தான் கேட்டேன். இந்த விஷயத்தில் அவர்தான்பெஸ்ட் அவரும் எனக்கு ரொம்பவே பொறுமையாக சொல்லி கொடுத்தார். அது ரொம்ப சந்தோஷமா இருந்தது என அவர் தெரிவித்தார்.

நான் இந்த துறையில் 28 வருஷமா இருக்கேன். இந்த மாதிரி படங்கள் அதிகம் வரவேண்டும். என்னைவிட அஜித் சார் தான் ரொம்ப சுவீட் ஆனவர்.அவருடன் ஒப்பிடும்போது நான் ஒன்னுமில்லை, அவரிடம் இருந்து நான் நிறையா கற்றுக்கொண்டேன் எனவும் அவர் பேசினார்.

எவளவு அன்பாக, கனிவாக, மதிப்பாக நடக்கலாம் என சொல்லி கொடுத்துள்ளார். என் வாழ்க்கையில ரொம்ப முக்கியமா ஆளுங்கனு பார்த்தால் அம்மா, அப்பா, அண்ணன் தான். இந்த படத்தை முழு என்டர்டெய்னராக பார்க்கவேண்டும். இதில் ஆக்‌ஷன் மட்டும் இல்லாமல் பல விஷயங்கள் உள்ளது என தெரிவித்தார்.

இந்த படத்தை பற்றி தெரிந்துகொள்ள நீங்க படத்தை பார்த்தால் தான் புரியும். இதில் பெயரை விட அந்த கதாப்பாத்திரத்தில் இதில் பல விஷயம் இருக்கு எனவும் மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தேர்தலைப் புறக்கணிக்கும் திருப்பூர் மக்கள்!

Gayathri Venkatesan

இடைத்தேர்தலில் அரசு ஊழியர்களின் வாக்குகள் திமுக கூட்டணிக்கு கிடைக்கும் – அமைச்சர் அன்பில் மகேஷ்

Web Editor

தமிழகத்தில் பணியில் இருக்கும் காவலர்களுக்கு உணவு வழங்கும் முறை என்ன ?

Web Editor