இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி அலுவலகத்தில் பொருட்கள் திருடுபோனதாக புகார்!

இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி அலுவலகத்தில் பொருட்கள் திருடுபோனதாக நடிகர் மன்சூர் அலிகான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி…

இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி அலுவலகத்தில் பொருட்கள் திருடுபோனதாக நடிகர் மன்சூர் அலிகான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  இந்த வாக்குகள் அனைத்தும் ஜூன் 4-ந்தேதி எண்ணப்படுகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளன.

இதனிடையே இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நடிகர் மன்சூர் அலிகான் நீக்கப்பட்டதாக  அக்கட்சியின் பொதுச்செயலாளர் கண்ணதாசன் அறிவித்து இருந்தார்.  இந்த நிலையில்,  இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் கண்ணதாசன் மீது நடிகர் மன்சூர் அலிகான் சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில்,  தனது இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் சீல்,  லெட்டர்பேடுகள், ரூ . 70 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்களை பொதுச் செயலாளர் கண்ணதாசன் எடுத்துச் சென்றதாக தெரிவித்துள்ளார்.   இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.