முக்கியச் செய்திகள் தமிழகம்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள்; டிஜிபி அதிரடி உத்தரவு

குழந்தைகள் மீதான பாலியல் புகார்கள் வந்தவுடன் அரை மணி நேரத்திற்குள் சம்பவ இடத்திற்கு விசாரணை அதிகாரி செல்ல வேண்டுமென தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார்.

குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு முற்றிப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை  தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் குழந்தைகள் மீதான பாலியல் புகார்கள் வந்த அரை மணி நேரத்திற்குள் சம்ப இடத்திற்கு விசாரணை அதிகாரி செல்ல வேண்டுமென தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்களை விசாரிக்கக்கூடிய அதிகாரி சமூக நல பாதுகாப்பு துறையின் மூலம் மன நல ஆலோசகர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். பாலியல் புகார் வந்த அரை மணி நேரத்திற்குள் விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்கு செல்ல வேண்டும் என்றும்,பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடனடியாக மருத்துவ உதவி அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.குடும்ப உறுப்பினர்களால் பாதிக்கப்படும் குழந்தைகளை விசாரணை அதிகாரி உடனடியாக மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க வேண்டுமெனக் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உறவினர்களிடம் இருந்து உடனடியாக எழுத்து பூர்வமான புகார் பெற்று அவர்களுக்கு சி.எஸ்.ஆர். வழங்கப்பட வேண்டும் எனவும், பாலியல் புகார்களில் கைது செய்யும் போது முறையாக வாக்குமூலம் பெற்று டி.என்.ஏ. மாதிரி சான்றிதழ் சேகரித்த பின்பு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் சாட்சியங்களை பாதுகாக்க வேண்டும் என்பதால் அவர்கள் தொடர்புடைய விவரங்களை காவல் நிலையத்தில் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் எனவும் டிஜிபி வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில் கூறியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

தனியார் மருத்துவமனையில் தவறான ஊசி செலுத்தப்பட்டதில் பெண் ஒருவர் உயிரிழப்பு?

Gayathri Venkatesan

’குக் வித் கோமாளி’ அஷ்வின் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

Vandhana

ரிஸ்வான் அதிரடி… வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது பாகிஸ்தான்

Ezhilarasan