கொரோனா பாதிப்பு; குணமடைந்தவர்களின் சதவீதம் உயர்வு

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைபவர்களின் சதவீதம் 96.62 ஆக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா  தொற்று கடந்த 2019-ம் ஆண்டு பரவைத்தொடங்கியது. முதல் ஆலையின்போது லட்சக்கணக்கனோர் உயிரிழந்தனர். கொரோனாவின் இரண்டாவது அலையின்போது ஆக்சிஜன்…

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைபவர்களின் சதவீதம் 96.62 ஆக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா  தொற்று கடந்த 2019-ம் ஆண்டு பரவைத்தொடங்கியது. முதல் ஆலையின்போது லட்சக்கணக்கனோர் உயிரிழந்தனர். கொரோனாவின் இரண்டாவது அலையின்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு மற்றும் மருத்துவமனையில் இடப்பற்றாகுறை உள்ளிட்ட காரணங்களால் இறப்பு சதவிகிதம் உயர்ந்தது. தொடர்ந்து கொரோனா தடுப்பூசி நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு செலுத்தும் பணி தீவிரமடைந்தது. மேலும் கொரோனா தொற்றிலிருந்து குணமடையும் சதவிகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நாட்டில் 151 கோடியே 94 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 29 லட்சத்து 60 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 156 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 46 ஆயிரத்து 569 கொரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை, இதுவரை 3 கோடியே 45 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி குணமடைபவர்களின் சதவீதம் 96.62 ஆக உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.